நாடு முழுவதும் நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் போட்டிகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றது. அவ்வகையில் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் புவியியல் அமைச்சகம் சார்பாக 7 வது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா வருகிற டிசம்பர் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் www.scienceindiafest.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யவும்.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் தொழில் ஆராய்ச்சி நிறுவனம் சார்பாக கட்டுரை போட்டி மற்றும் போஸ்டர் தயாரிக்கும் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் தங்களது படைப்புகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயார் செய்து அனுப்ப வேண்டும். மாணவர்கள் கட்டுரை மற்றும் போஸ்டர்கள் போன்ற படைப்புகளை [email protected]என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வருகின்ற டிசம்பர் 3 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். ஏற்கனவே தலைவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.