பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சுழற்சிமுறை வகுப்புகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் கடந்த சில மாதங்களாக குறைந்து வருகிறது. அதை தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவர்களின் நலனை கருதி செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்று முதல்வர் மு க ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு டிசம்பர் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதாக அறிவித்தார். மேலும் ஜனவரி முதல் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு சுழற்சிமுறை இன்றி வழக்கம்போல் வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காலாண்டு, அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்ட போதிலும் பள்ளி இறுதித் தேர்வை நடத்த கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி ஏப்ரல் மாதங்களில் பள்ளிகளுக்கும், மே மாதத்தில் கல்லூரிகளுக்கும் தேர்வு நடத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு கட்டாயம் என்பது தற்போது தெரியவந்துள்ளது.