Categories
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு குட் நியூஸ்…. அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி நேரங்களில் கூடுதல் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களில் கேமரா கட்டாயம் பொருத்தப்படும் என்றும் பள்ளி,கல்லூரி வாகனத்தில் கேமரா பொருத்துவதற்கான ஆய்வும் கூடிய விரைவில் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். கூடுதலாக ஏசி பேருந்து வாங்குவதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வரும் நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பேருந்துகளில் உள்ள தொழில்நுட்ப கோளாறுகள் போர்க்கால அடிப்படையில் சரி செய்யப்படும் என்றும்,பை காட்சிகள் இயங்குவது குறித்து மத்திய அரசின் தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லை என்றும் முதலமைச்சர் மூலம் மத்திய அரசுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |