தூத்துக்குடியில் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று பள்ளி கல்லூரி மாணவர்கள் உதவியுடன் ஓராண்டில் 6,000 மரங்களை நட்டு சாதனை படைத்துள்ளது.
தூத்துக்குடி நகரம் தொழிற்சாலை மிகுந்த பகுதி என்பதால் இங்கு மற்ற நகரங்களை விட ஆக்சிஜன் அளவு குறைவாகவே இருக்கும். இதனை கருத்தில் கொண்டு தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உதவியுடன் கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 6,000 மரக்கன்றுகளை நகர் முழுவதும் நட்டு சாதனை படைத்துள்ளது. தற்போது நான்கு வழிச்சாலையில் 7 கிலோ மீட்டர் தூரம் வரை விபத்துக்களை தவிர்க்கும் வகையில் 3 ஆயிரம் அரளிச் செடிகளை நடும் பணியில் இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது.