Categories
தேசிய செய்திகள்

பள்ளி கழிவறையை சுத்தம் செய்யும் மாணவிகள்…. வெளியான அதிர்ச்சி சம்பவம்….எங்கு தெரியுமா….?

உத்தரபிரதேசத்தில் அரசு பள்ளி கழிவறையை மாணவிகள் சுத்தம் செய்யும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது.
உத்தரபிரதேச மாநிலம் புலந்தர்சாஹர் மாவட்டம் அப்பர் கோட் என்னும்  பகுதியில் அரசு ஆரம்பப்பள்ளி இருக்கிறது. இந்த பள்ளியில் உள்ள கழிவறையை 2 மாணவிகள் சுத்தம் செய்யும் வீடியோ நேற்று சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோவை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் இது பற்றி  விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. மேலும் பள்ளி மாணவிகளை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த பள்ளி நிர்வாகத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |