Categories
தேசிய செய்திகள்

பள்ளி கழிவறையை சுத்தம் செய்த குழந்தைகள்….. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பள்ளி என்ற மாவட்டத்தில் இருக்கும் அரசு தொடக்கப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளை கழிவறையை சுத்தம் செய்யும்படி கட்டாயப்படுத்திய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் பள்ளி குழந்தைகளை கழிவறையை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்திய நிலையில் அவர்கள் கழிவறையை சுத்தம் செய்வதும் ஒரு நபர் அவர்களை திட்டுவதும் வீடியோவில் இடம் பெற்றுள்ளது.

மேலும் சொன்னபடி செய்யாவிட்டால் கழிவறைக்குள் வைத்து பூட்டி விடுவேன் என்றும் அந்த நபர் மிரட்டுவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ள நிலையில் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் இந்த வீடியோவை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அப்பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தலைமையாசிரியர் மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |