Categories
மாநில செய்திகள்

பள்ளி காலாண்டு விடுமுறையில் மாற்றமா?….. கல்வித்துறை அதிகாரிகள் கொடுத்த விளக்கம்….!!!!

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட நடப்பு கல்வி ஆண்டிற்கான பள்ளி வேலை நாட்கள் விடுமுறை அடங்கிய அட்டவணையில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு 21ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை மாவட்ட அளவில் நடத்தப்படும் என அறிவித்திருந்தது. காலாண்டு தேர்வு விடுமுறை மற்றும் ஆயுத பூஜை விடுமுறை அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை விடப்பட்டு, மீண்டும் அக்டோபர் ஆறாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில் இதில் சில மாற்றங்கள் கொண்டு வர உள்ளதாக நேற்று தகவல் வெளியாகின. தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு இரண்டாம் பருவத்துக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி அக்டோபர் ஆறாம் தேதி முதல் எட்டாம் தேதி வரை தமிழகம் முழுவதும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அளிக்கப்பட உள்ளது.

இதனால் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு அக்டோபர் 9ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டு, பத்தாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும், 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆறாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் கூறப்பட்டு இருக்கின்றது. இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது “தற்போது வரை வாய்வழி அறிவுறுத்தலாக தான் உள்ளது. அதிகாரப்பூர்வமாக பள்ளி கல்வித்துறை அறிவிப்புகளை வெளியிடும். அப்படி வெளியிடும்போது தான் இது உறுதிப்படுத்தப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |