Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பள்ளி சென்று வந்த மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி…!!

மாணவியை கடத்திய நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நீலன்தாங்கல் பகுதியில் ஓட்டுனரான செல்லப்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பள்ளி சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்த 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை செல்லப்பாண்டி கடத்தி சென்றுள்ளார். பின்னர் கோவிலில் வைத்து மாணவியை திருமணம் செய்து குடும்பம் நடத்தியுள்ளார்.  இதுகுறித்து மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் செல்லபாண்டியை கைது செய்தனர். பின்னர் மாணவியை மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Categories

Tech |