இன்றைய காலகட்டத்தில் கல்வி மிக மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சமூகத்தை நேசித்து சமூகத்தை வளர்த்தெடுக்கும் மனிதனாக ஒருவனை கல்வியை மாற்றுகின்றது. எனவே தான் மத்திய மாநில அரசுகள் குழந்தைகள் மாணவர்களின் கல்வியில் மிகுந்த கவனம் செலுத்துகின்றனர். அனைவரும் கல்வி கற்க வேண்டும் அனைவருக்கும் கல்வியை உறுதி செய்ய வேண்டும் என்று பல நடவடிக்கைகளை அரசாங்கங்கள் எடுத்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழக அரசு சார்பில் ஒரு நடவடிக்கையின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பள்ளிக்கூடம் செல்லாத குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்கும் திட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசு வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தொழிலாளர்களின் குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தமிழக அரசின் இந்த முயற்சியை சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டுகின்றனர்