Categories
சென்னை மாநில செய்திகள்

பள்ளி தலைமையாசிரியர்கள் பதவி உயர்வு…. தற்காலிக பட்டியல் வெளியீடு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. தற்போது பள்ளி கல்வி துறை சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு வருடமும் அரசு ஆசிரியர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகின்றது. அவ்வகையில் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு ஏதும் நடத்தப்படவில்லை. தற்போது பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு வழங்குதல் உள்ளிட்ட செயல்பாடுகளுக்கான கலந்து ஆய்வுகள் நடத்த தொடர்ந்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

அவ்வகையில் தற்போது சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் உயர்நிலைப் பள்ளிகளில் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் 2021- 2022 ஆம் கல்வி ஆண்டில் பல்வேறு உயர்நிலை பள்ளிகள் ஏற்பட உள்ளன. அந்தப் பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்பும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த தலைமையாசிரியர் பதவி தகுந்த மூத்த பட்டதாரி மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

பட்டதாரி ஆசிரியர் பதவியில் குறைந்தது ஐந்து ஆண்டுகள் பணியாற்றி பதவி உயர்வு மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களும் இந்த பதவிக்கு தகுதியானவர்கள் என்று குறிப்பிட்டுள்ளது. தற்போது இதற்கு தகுதியான மூத்த பட்டதாரி மற்றும் தமிழ் ஆசிரியர்களுக்கான தற்காலிக தேர்ந்தோர் பட்டியல் சென்னை மாநகராட்சியால் வெளியிடப்பட்டுள்ளது.

Categories

Tech |