உளுந்தூர்பேட்டை அருகே பள்ளி தலைமை ஆசிரியரை தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே இருக்கும் சேந்தமங்கலம் அரசு தொடக்கப்பள்ளியில் சீனிவாசன் என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார். இவரிடம் அதே கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி அந்தோணி ராஜ் என்பவர் தனது மகனுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்குமாறு கேட்டு இருக்கின்றார்.
இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் அந்தோணி ராஜ் ஆத்திரமடைந்து சீனிவாசனை ஆபாசமாக திட்டி தாக்கியதாக சொல்லப்படுகின்றது. பின் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தோணி ராஜை கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.