Categories
மாநில செய்திகள்

பள்ளி திறப்பிற்கும்…. இதற்கும் எந்த தொடர்பும் இல்லை…. அமைச்சர் சொன்ன தகவல்…!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்ததால் செப்-1 முதல் 9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அருகே மாணிக்கம்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் சக மாணவிகள் ஆசிரியர்களிடையே பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனாவிற்கும், பள்ளி திறப்பிற்கும் எந்தவொரு தொடர்பு இல்லை என்று  தெரிவித்துள்ளார். நோய்த்தொற்று அறியப்பட்ட சில பள்ளிகள், கல்லூரிகள் கண்டறியப்பட்டு மூடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் திறப்பால் பெருமளவில் இதுவரை நோய்தொற்று கண்டறியப் படவில்லை என்றாலும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |