Categories
மாநில செய்திகள்

பள்ளி திறப்பு: உறுதியான கொரோனா…. மருத்துவ கண்காணிப்பில் 60 மாணவர்கள்…. பரபரப்பு செய்தி…!!

மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் சக 60 மாணவர்கள் மருத்துவ கண்காணிப்பில் உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதையடுத்து பள்ளிகள் திறப்பு குறித்து பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்த நிலையில் மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்புக்கு பிறகு கடந்த ஜனவரி 19ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது.

இந்நிலையில் சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே பெரியகிருஷ்ணாபுரம் மாதிரி அருகே பள்ளிக்கு சென்ற தும்பல் பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு மாணவருக்கு கொரோனா உறுதியானதால் சக மாணவர்கள் 60 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். இதனால்  ஆசிரியர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

Categories

Tech |