Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“பள்ளி நிர்வாகத்திடம் மிரட்டல் விடுத்த போலீஸ் இன்ஸ்பெக்டர்”… பணியிடை நீக்கம்… டி.ஐ.ஜி அதிரடி உத்தரவு…!!!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சேந்தங்குடி மெயின் ரோட்டை சேர்ந்த சீனிவாசன் (38) என்பவர் வசித்து வருகிறார். திருமணமாகாத இவர் மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராகவும், அதே பள்ளியின் மாணவர் விடுதியையும் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் மாணவர் ஒருவரிடம் ஆசிரியர் சீனிவாசன் தகாத உறவுக்கு வலியுறுத்தியுள்ளார். இதனை அறிந்த மாணவனின் தாயார் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரின் பேரில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா போக்சோ  சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் சீனிவாசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து அந்த பள்ளி நிர்வாகத்திடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணம் கேட்டதாகவும், பணம் தர மறுத்தால் இந்த வழக்கில் சம்மந்தமில்லாத நபர்களையும் இணைத்து போக்சோ  வழக்கு பதிவு செய்வேன் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. மேலும் தஞ்சை டி.ஐ.ஜி கயல்விழிக்கும் புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் ஒரு குழு அமைத்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு டி.ஐ.ஜி உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த குழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். அதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதாவை பணியிடம் நீக்கம் செய்து டி.ஐ.ஜி கயல்விழி உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |