85 வயதிலும் ஆசிரியர் ஒருவர் சைக்கிளில் சென்று புத்தகங்களை வழங்குகிறார்.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மணல்மேட்டை பகுதியில் கலியசாமி (85) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர் ஆவார். இவருக்கு தமிழ் மொழியின் மீது இருந்த பற்றின் காரணமாக தன்னுடைய பெயரை கலைவேந்தன் என மாற்றி வைத்துக் கொண்டார். இவர் தமிழில் ஏராளமான சிறுகதை தொகுப்புகளை எழுதியுள்ளார். இவர் மொத்தம் 102 தமிழ் நூல்களை எழுதியுள்ளார்.
இவர் ஓய்வு பெற்றாலும் கூட தொடர்ந்து நூல்களை எழுதி வருவதோடு தான் எழுதிய நூல்களை சைக்கிளில் சென்று பள்ளிகளுக்கும், நூலகங்களுக்கும் இலவசமாக கொடுக்கிறார். மேலும் செல்போன் ஆதிக்கம் அதிகரித்து விட்டதால், மக்களுக்கு புத்தகம் படிக்கும் ஆர்வம் குறைந்துவிட்டது எனவும் என்னை போன்ற எழுத்தாளர்களை தமிழக அரசு கண்டிப்பாக ஊக்குவிக்க வேண்டும் எனவும் கலைவேந்தன் கூறியுள்ளார்.