Categories
மாநில செய்திகள்

பள்ளி பாடப்புத்தகங்களில்…. சாதிப்பெயர்கள் நீக்கம்…. தமிழக அரசு அதிரடி…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததைதையடுத்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளி பாடப்புத்தகங்களில் தலைவர்கள் பெயருக்கு பின்னால் இருக்கும் சாதி பெயர்களை தமிழக அரசு நீக்கியுள்ளது.

அதன்படி, பன்னிரண்டாம் வகுப்பில் தமிழ்த் தாத்தா உ.வே சுவாமிநாத அய்யர் என்பது உ.வே  சுவாமிநாதர் என மாற்றப்பட்டுள்ளது. அவரின் ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்பது மீனாட்சிசுந்தரனார் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இனிவரும் காலங்களில் பாடநூல்களில் சாதி அடையாளங்கள் எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 

Categories

Tech |