Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பள்ளி மாடியிலிருந்து குதித்த மாணவி…. அதிர்ச்சியில் பெற்றோர்…. தென்காசியில் பரபரப்பு…!!

11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி பள்ளி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள கல்லூத்து கிராமத்தில் கூலி தொழிலாளியான லிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு பொன்னரசி என்ற மகள் இருந்துள்ளார். இவர் பவுத்திரம் அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் உணவு இடைவேளையின் போது பொன்னரசி பள்ளி ஆய்வக கட்டிடத்தின் 2-வது மாடியில் இருந்து கீழே குதித்துவிட்டார்.

இதனையடுத்து படுகாயமடைந்த பொன்னரசியை அருகில் உள்ளவர்கள் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன் பின் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொன்னரசி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |