பள்ளி மாணவனை தனியறையில் வைத்து ஆசிரியர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் ரிங்கஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த பள்ளியில் கடந்த புதன்கிழமை அன்று இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சம்பவத்தன்று பள்ளியின் பிரார்த்தனை கூடத்தின் போது 12 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் வரிசையில் சரியாக நிற்க வேண்டும் என அறிவுறுத்தலை பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது. இதை கவனித்த ஆசிரியர் ஒருவர் அந்த மாணவனை அறைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் இதற்கு மாணவன் எதிர்ப்பு தெரிவித்ததால் புகார் தலைமை ஆசிரியருக்கு சென்றுள்ளது. அதன் பின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் போன்றோர் அந்த மாணவனை தனி அறைக்கு அழைத்து சென்று சரமாரியாக தாக்கி இருக்கின்றனர் என பாதிக்கப்பட்ட மாணவனின் குடும்ப உறுப்பினர்கள் குற்றம் சாட்டி இருக்கின்றனர்.
மேலும் இந்த சம்பவம் பற்றி போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில் மாணவனை அடித்து தாக்கிய ஆசிரியர்கள் இருவரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இதற்கிடையே அன்றைய தினம் மாணவன் தன்னை அந்ததாக கூறி அந்த பள்ளியின் மற்றொரு ஆசிரியர் மீது போலீசில் வழக்கு பதிவு செய்து இருக்கின்றார். இந்த சம்பவம் தொடர்பாக மாணவனின் குடும்பத்தினர் மற்றும் பள்ளியின் மற்றொரு ஆசிரியர் ஆகியோர் தனியாக அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸ் தரப்பில் எஃப் ஐ ஆர் பதிவு செய்திருக்கின்ற மேலும் இரண்டு வழக்குகளும் விசாரிக்கப்படுகின்றன போலீஸ் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.