விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் பள்ளி மாணவன் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் பதற்றம் நிலவுகிறது.
பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் ஹரிபாபு தற்கொலை செய்து கொண்டதற்கு பள்ளி நிர்வாகத்தின் அடாவடி வசூல்தான் காரணம் என்று அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர். மாணவனின் உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடலை வாங்க மறுத்து வரும் மாணவனின் உறவினர்கள் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.