Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் அத்துமீறி செயல்பட்ட சிறுவர்கள்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…. போலீஸ் விசாரணை….!!!!

திருப்பூர் ரயில் நிலையம் அருகில் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இருக்கிறது. இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் மதியஉணவு இடைவேளையில் அருகேயுள்ள கடைகளுக்கு சென்று தின்பண்டங்கள் வாங்கி சாப்பிடுவார்கள். இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த 18 வயதுக்கு கீழே பள்ளி படிப்பை பாதியிலேயே விட்ட சிறுவர்கள் சில பேர் மாணவர்களை மிரட்டி பணத்தை பறித்து செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதேபோன்று நேற்று மதியம் மாணவர் ஒருவர் சென்ற போது சிறுவர்கள் அவரை வழிமறித்து பணத்தை பிடுங்கியுள்ளனர். இதுகுறித்து அந்த மாணவர் பள்ளி ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார். அதன்பின் நேற்று மாலை பள்ளியின் ஆசிரியர் அப்பகுதிக்கு சென்று சிறுவர்களிடம் கேட்டபோது அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு சிறுவர் மட்டும் சிக்கிகொண்டான். அதனை தொடர்ந்து காவல்துறையினர் அந்த சிறுவனை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன் இதுபோன்ற சம்பவம் நடந்தது. இந்த சூழ்நிலையில் ஆசிரியர் அந்த பகுதிக்கு சென்று சிறுவர்களிடம் தட்டிக் கேட்க சென்றபோது அவர்கள் ஒன்றுசேர்ந்து ஆசிரியரை கத்தியால் குத்தி விடுவதாக மிரட்டியிருக்கின்றனர். மேலும் இரவு நேரங்களில் பள்ளிக்குள் நுழைந்து கழிப்பிடத்திற்குள் கஞ்சா புகைப்பது போன்ற சம்பவங்களில் அப்பகுதி இளைஞர்கள் ஈடுபடுவதாகவும் கூறினர். ஆகவே இதை காவல்துறையினர் தடுக்கவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

Categories

Tech |