Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களின் சாகச பயணம்…. ஆபத்தை உணர்ந்த பெற்றோர்கள் அதிர்ச்சி….!!!!

கொரோனா காலகட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் ஒன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்தது. இந்தநிலையில், புதுவையில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து, மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாததால் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்கள், நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

காலை-மாலை பொதுமக்கள் அதிகம் செய்யும் நேரங்களில் குறைவான பேருந்துகள் இயக்கப்படுவதால், நகரப் பேருந்துகளில் அதிகமான கூட்டம் உள்ளது. அதில் லாஸ்பேட்டை நாவலர் நெடுஞ்செழியன் பள்ளி அருகே ஒரு தனியார் பேருந்தில் 2 படிகட்டுகள் மட்டுமல்லாமல் பின்புறம் உள்ள மேற்கூரை ஏணியிலும் பள்ளிமாணவர்கள் தொங்கியவாறு பயணித்துள்ளனர். மேலும் நடத்துனரின் எச்சரிக்கைக்கு பின், அதிலிருந்து சில மாணவர்கள் மட்டும் கீழே இறங்கினர். மற்றவர்கள் படிக்கட்டில் தொங்கியவாறு பயணித்தனர்.

இதுதொடர்பான வீடியோ வைரலாகி மாணவர்களின் பெற்றோரையும், பொதுமக்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. பள்ளி மாணவர்களை போக்குவரத்து காவல்துறையினர் உடனடியாக அடையாளம் கண்டு, அவர்களின் பெற்றோரை வரவழைத்து எச்சரித்து அனுப்ப வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் காவல்துறை தலைமையை வலியுறுத்தியுள்ளனர். மேலும் மாணவர் சிறப்பு பேருந்துகள் 50 சதவிகிதமாவது இயக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

Categories

Tech |