Categories
மாநில செய்திகள்

“பள்ளி மாணவர்களுக்கும் சேமிப்பு கணக்கு”…… தபால் நிலையத்தில் அசத்தல் திட்டம்….!!!!

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் வங்கியான இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் பள்ளி மாணவர்கள் சேமிப்பு கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் திறந்த நிலையில் மாணவர்களுக்கு சேமிப்பு கணக்கு விவரங்கள் பள்ளியில் சேர்ப்பது அவசியமாகும். அதன்படி 10 வயது நிரம்பிய அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அருகில் உள்ள தபால் நிலையங்களில் இயங்கிவரும் இந்திய தபால் துறையின் வங்கிக்கு சென்று சேமிப்பு கணக்கை தொடங்கி கொள்ளலாம். வங்கி கணக்கில் இருப்பு தொகை எதுவும் தேவை கிடையாது.

கணக்கு தொடங்கியதும் 100 ரூபாய் மட்டும் செலுத்த வேண்டும். இந்த சேமிப்பு கணக்கை தொடங்க மாணவர்கள் தங்களுடைய ஆதார் அட்டை மற்றும் செல்போன் கொண்டு வர வேண்டும். கணக்கு தொடங்கப்பட்ட பிறகு மாணவர்களுக்கு கணக்கு எண், பெயர் விவரம், ஐஎஃப்சி கோடு போன்ற விவரங்கள் வழங்கப்படும். அதை பள்ளியில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த வங்கி சேவைகள் உதவித்தொகை பெறும் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |