தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு துணை தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இன்று அசல் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் துணைத் தேர்வு நடத்தப்பட்டது. அதில் தேர்ச்சி அடைந்த மாணவர்களுக்கு இன்று அசல் சான்றிதழ் வழங்கப்படுவதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
மேலும் மாணவர்கள் தேர்வு எழுதிய மையங்களில் பெற்றுக்கொள்ளலாம் என்றும், மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தவர்களுக்கு புதிய மதிப்பெண் சான்றிதழ் பிறகு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.