தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 40 சதவீத பாடத்திட்டத்தை குறைத்து அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற இருப்பதால், அவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
அப்போது 90% பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். அதனால் ஜனவரி 19ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 10 மற்றும் பாட வகுப்பு மாணவர்களுக்கு 40 சதவீத பாடத் திட்டத்தை அரசு குறைத்துள்ளது.
தற்போது குறைக்கப்பட்டு உள்ள பாடத்திட்டத்திற்கான ப்ளூ பிரிண்ட் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி மாணவர்கள் http://www.padasalai. net/ என்ற இணையத்திற்கு சென்று பாடத்திட்ட மாற்றத்தை தெரிந்துகொள்ளலாம். இந்த ப்ளூ பிரிண்ட் ஜனவரி 19 பள்ளிகள் சேர்ந்தவுடன் மாணவர்களுக்கு தரப்பட உள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் இடையே மகிழ்ச்சியை அளித்துள்ளது.