Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு அவரவர் பள்ளிகளிலேயே தடுப்பூசி…. தமிழக அரசு….!!!!

தமிழகத்தில் பொரோனோ அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அவரவர் பள்ளிகளிலேயே நோய் தடுப்பு நடவடிக்கைகளாக DPT, TD தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது என அரசு அறிவித்துள்ளது. அனைத்து பள்ளிகளிலும் நவம்பர் 5 முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரை தடுப்பூசிகள் செலுத்தப்படும். அதற்கான வழிகாட்டுதல்கள் பிறப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |