தமிழக அரசு பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மாணவர்கள் இடையே நல்ல மதிப்பை பெற்று வருகிறது. மேலும் மாணவர்களுக்கு சத்துணவு திட்டமும் செயல்படுத்த பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் முக்கிய பிரமுகர் மற்றும் முக்கிய தலைவர்களின் பிறந்தநாளன்று சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் அனைத்து மாணவர்களுக்கும் இனிப்பு பொங்கல் வழங்கப்பட வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், எம்ஜிஆர் ஆகிய தலைவர்களுடைய பிறந்தநாள்களில் வழக்கமாக வழங்கப்படும் சத்துணவுக்கு பதிலாக எந்தவித கூடுதல் செலவினமும் இன்றி சத்துணவு திட்டத்தில் பயன்படும் அனைத்து மாணவர்களுக்கும் இனிப்பு பொங்கல் வழங்கப்பட வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே தலைவர்களுடைய பிறந்தநாளுக்கு இனிப்பு பொங்கல் வழங்குவதற்கு தேவைப்படும் வெல்லம், நெய் போன்ற செலவினங்களை பருப்பு பயன்படுத்தாத நாட்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள உணவூட்டு செலவிலமான 1.70 அல்லது 1.80 ஐ பயன்படுத்தி செலவினம் மேற்கொள்ளலாம் என்று தெரிவித்துக் கொள்ளப்பட்டுள்ளது.