சீனாவில் கடந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களை மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகியது. நீண்ட நேரம் ஒரே இடத்தில்அமர்ந்து செல்போன் மற்றும் கணினி உள்ளிட்ட மின்சாதனங்கள் மூலம் கல்வி கற்பதால்உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க கூடிய வகையில் சீன அரசு புதிய சட்டம் ஒன்றை இயக்கி உள்ளது. அதில் பெற்றோர் குழந்தைகளிடம் நேரத்தை செலவிட வேண்டும்.உடற்பயிற்சி செய்தல், படித்தல் போன்ற செயல்பாடுகளில் பெற்றோர்கள் குழந்தைகளுடன் ஈடுபட வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. மேலும் குழந்தைகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மாணவர்களின் வீட்டுப் பாடங்களை குறைத்து விடுமுறை நாட்களில் முக்கிய பாடங்களுக்கு டியூசன் கற்பிப்பதை தடை செய்யும் வகையில் புதிய சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.