Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு இன்று… 3 மணிக்கு… மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு துணை தேர்வு எழுதி மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு துணைத் தேர்வு நடத்தப்பட்டு அதன் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

தற்போது பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதி மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண்களில் மாற்றம் உள்ள மாணவர்கள், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை இன்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அந்தப் பட்டியல் http://www.dge.tn.gov.in/என்ற இணையதளத்தில் பிற்பகல் 3 மணிக்கு தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் பட்டியலில் இடம்பெறாத விடைத்தாள் மதிப்பெண்களில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |