Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி திட்டம் ரத்தா….? வெளியான மிக முக்கிய தகவல்….!!!!

கடந்த அதிமுக ஆட்சியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை  தொடங்கி வைத்தார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக லேப்டாப் தயாரிக்கும் நிறுவனங்கள் அரசின் கொள்முதல் விலைக்கு டெண்டர் எடுக்க வர முற்படாததால், இலவச லேப்டாப் வழங்குவதில் சிக்கல் எழுந்தது. இதனால், லேப்டாப் வழங்கும் திட்டம் ரத்தாகுமா என்று மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு Laptop வழங்கும் திட்டம் ரத்து செய்யப்படாது. ஆனால், பல்வேறு சிக்கல்கள் உள்ளன. சிக்கல்களுக்கு தீர்வு கண்டு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவோம். இதனால் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் ரத்து செய்யவில்லை. நிதிநிலையை ஆராய்ந்து படிப்படியாக மடிக்கணினி வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

Categories

Tech |