சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொல்லங்கோடு சப்-இன்ஸ்பெக்டர் மோகனய்யர் தலைமையிலான ஒரு குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் குழால் பகுதியில் இருக்கும் ஒரு தனியார் பள்ளி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது 3 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்தனர்.
இவர்கள் பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதை பார்த்த காவல்துறையினர் 3 வாலிபர்களையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அடைக்காகுழி பகுதியை சேர்ந்த ஜெரின், அருண் சிங் மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த முகமது நோபில் என்பது தெரியவந்தது. மேலும் இவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சாவையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.