கன்னியாகுமரி மாவட்டத்தில் கொல்லங்கோடு பகுதியில் இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் கொல்லங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளி முன்புறம் சந்ததிகத்திற்கு இடமான முறையில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். இந்த சோதனையில் அவரிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் இது குறித்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் வல்லவிளை பகுதியைச் சேர்ந்த அனீஸ் என்பவர் அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. மேலும் அனீஸ் மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் தேடப்படும் குற்றவாளியாக இருந்து வருவதும் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவரை கைது செய்ததோடு அவரிடம் இருந்த 100 கிராம் போதை பவுடரையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அனிஸுக்கு போதை பவுடர் எப்படி கிடைத்தது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.