Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு கட்டாய மாஸ்க்…. மாநில அரசின் அதிரடி உத்தரவு….!!!

சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பிஎஃப் 7 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் இந்தியாவில் பரவி விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸிலிருந்து மக்களை பாதுகாக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

இந்நிலையில்  தற்போது பல்வேறு மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில், புதிய வகை கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டிச.,31 நள்ளிரவு 1 மணிக்குமேல் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பொது இடங்கள், தியேட்டர்கள், கல்வி நிறுவனங்களில் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் மாஸ்க் அணிவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |