தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் ஏழை மாணவர்களின் படிப்பினை ஊக்குவிப்பதற்காகவும், ஊட்டச்சத்து குறைபாடுகளை போக்கவும், கற்றல் இடை நீற்றலை தவிக்குவதற்காக காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று முதல்வர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார். இந்த திட்டத்தின் முதற்கட்டமாக 1545 அரசு பள்ளிகளிலும் பயிலும் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 95 தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த திட்டத்தினை திறன் பட செயல்படுத்திட ஏதுவாக ஐஏஎஸ் அதிகாரியான இளம்பகவத்தை ஒருங்கிணைப்பு அலுவலராக நியமித்து அரசாணையை வெளியிட்டுள்ளது. மேலும் சிறப்பு அதிகாரிகளின் பணிகள் பொறுப்புகள் என்ன என்பது குறித்து அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. காலை உணவு திட்டத்தினை திறன்பட செயல்படுத்தும் வகையில் சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் இணைந்து செயல்படுதல், சிற்றுண்டிக்கான உணவு, மூலப்பொருட்களை உரிய முறையில் கொள்முதல் செய்வதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் உள்ளூரில் கிடைக்கக்கூடிய விலையக்கூடிய காய்கறிகள், சிறுதானியங்கள் கொள்முதல் செய்வதற்கான எளிய வழிமுறைகளை கண்டறிய வேண்டும் எனவும் ,சமையல் கூடத்தில் இருந்து பள்ளிகளுக்கு வாகனம் மூலம் எடுத்துச் சென்று பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் உணவு சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.