Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. தமிழக அமைச்சர் சூப்பர் தகவல்….!!!!!

பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அது மாணவர்கள் மட்டுமல்லாமல் பெற்றோர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.கோவை காந்திபுரத்தில் பெரியாரின் 143 ஆவது பிறந்த நாளையொட்டி தந்தை பெரியார் திராவிட கழக அலுவலகத்தில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. அதில் பெரியார் தொண்டர்கள்,சமூக ஆர்வலர்கள் போன்றோர் இந்த முகாமில் பங்கேற்று ரத்த தானம் செய்தனர். மேலும் இந்த முகாமில் தந்தை பெரியார், திராவிடர் கழகம், திமுக, விடுதலைச் சிறுத்தைகள், தமிழ் புலிகள், போன்ற பல அரசியல் கட்சியினர் ஆர்வமுடன் கலந்து கொண்டார்கள்.

கோவை காந்திபுரத்தில் உள்ள, தந்தை பெரியார் படிப்பகத்தில் நடைபெற்ற முகாமில் தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் போன்றோர் இந்த முகாமில் பங்கேற்று அதை ஆரம்பித்து வைத்தனர். அதன் பின்னர் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் செய்தியாளர்களிடம் பேசும்போது, செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி பெரியார் பிறந்த நாளன்று சமூக நீதி வழங்கும் உறுதிமொழியை திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் பெண்களுக்கு வேலைவாய்ப்பில் அதிக அளவு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

மேலும் தற்போது பெண்கள் வேலைவாய்ப்பில் 40% உள்ளன.வரும் நாட்களில் அவை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. மேலும் ஆதிதிராவிடர் நல கட்டிடங்களை நாங்கள் ஆய்வு செய்யும் பொழுது அதில் பல கட்டிடங்கள் மோசமான நிலையில் இருக்கின்றது. இதனையடுத்து பல பள்ளிகளில் சுற்றுச்சுவர் இல்லாமல் இருக்கிறது. அதனால் 25 கோடி நிதி ஒதுக்கியுள்ளோம். அடுத்தபடியாக ஸ்மார்ட் பள்ளிகளில் 112 ஸ்மார்ட் பள்ளிகளில் உடனடியாக மேம்படுத்த இருக்கின்றோம்.

பள்ளிகளில் பயின்று வரும் ஆதிதிராவிட மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் அவர்களின் வங்கிக்கணக்கில் தமிழக அரசு அனுப்பி வருகின்றது. மேலும் ஸ்காலர்ஷிப் கிடைக்காமல் இருந்தால் அவர்கள் உடனடியாக தகவல் தெரிவித்தால் அவை பூர்த்தி செய்யப்படும். தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் மையங்களில் 15 லட்சம் தடுப்பூசிகள் போடப்படுகிறது. மத்திய அரசு தமிழகத்திற்கு கொரோனா தடுப்பூசிகள் அதிகமாக வழங்க வேண்டும் என்று அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கூறியுள்ளார். இந்த அறிவிப்புக்கு மாணவர்கள், பெற்றோர் மேலும் பலர் வரவேற்பு அளித்துள்ளனர்.

Categories

Tech |