Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு செம்ம நியூஸ்…. தனிப் பேருந்து…. அமைச்சர் தகவல்….!!!!

தமிழகத்தில் தலைமையேற்றுள்ள திமுக தலைமையிலான அரசு மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வித்துறையில் அடுத்தடுத்து பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாட்டால் 2021 – 2022 ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக அதிகரித்துள்ளது. மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, இலவச பாட புத்தகம், சீருடை மற்றும் மதிய உணவு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிவருகிறது. அதில் முக்கியமான ஒன்று இலவச பேருந்து பயணம்.

பள்ளி மாணவர்கள் அரசுப் பேருந்துகளில் பேருந்து பயண அட்டை மூலம் இலவசமாக பயணம் செய்யலாம். அந்தந்த பள்ளிகள் மூலம் போக்குவரத்து துறை மூலம் இலவச கட்டணமில்லா பேருந்து அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஏராளமான மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்தத் திட்டம் கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்கு நீண்ட தூரம் பயணம் செய்யும் மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. இதன் மூலம் அரசுப் பேருந்துகளில் காலை மற்றும் மாலை என இரு நேரங்களில் பள்ளி மாணவர்கள் பயனடைகின்றனர்.

இந்த நேரங்களில் மக்கள் கூட்டம் பேருந்துகளில் அலைமோதுகிறது. இதனால் மாணவர்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். சில மாணவர்கள் அவசரமாக ஓடும் பேருந்தில் ஏறுகின்றன. இதனால் அவர்கள் உயிருக்கே ஆபத்து நேரிடும் நிலை உருவாகியிருக்கிறது. இதையடுத்து பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் பள்ளி மாணவர்கள் வசதிக்காக தனியாக பேருந்து இயக்குவது குறித்து முதல்வர் முக ஸ்டாலினுடன் ஆலோசித்து அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

Categories

Tech |