தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்ததால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இதனையடுத்து பாதிப்பு சற்று குறைந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப் பட்டது . ஆனால் சுழற்சி முறையில் பள்ளிகள் நடத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் ஜனவரி 3 முதல் 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு சுழற்சி முறை இன்றி தினமும் வழக்கம்போல வகுப்புகள் நடத்தப்படும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தினமும் வகுப்பு நடத்துவது பற்றி டிசம்பர் 25ஆம் தேதி மீண்டும் ஆலோசனை நடத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.