தமிழகத்தில் பள்ளி செல்லும் மாணவர்கள் சீருடை மற்றும் பழைய பஸ் பாஸ் வைத்திருந்தாலே இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற இருப்பதால், அவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது 90% பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் மாணவர்களுக்கு அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்க பாஸ் கொடுக்கப்படவில்லை. மாணவர்களுக்கு எப்படி பாஸ் வழங்கடுமா என்ற சந்தேகம் இருந்து வந்தது. இதற்கு போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கமளித்துள்ளார். பள்ளி செல்லும் மாணவர்கள் சீருடை மற்றும் பழைய பாஸ் வைத்திருந்தாலே போதும், இலவசமாக அரசு பஸ்களில் பயணம் செய்துக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார். மேலும், ஜெர்மன் கே.எப்.டபுள்யூ. வங்கியில் இருந்து கடன் உதவி பெற்று மின்சார பேருந்து போக்குவரத்தும், பி.எஸ்.-6 ரக பேருந்துகளும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளன. மீண்டும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைந்ததும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.