10 மற்றும் 12 ம் வகுப்பு சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கு எழுத்துப் பூர்வமாக தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி மக்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இந்நோய் தொற்று தீவிரமடைந்து வந்ததன் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் படிப்படியாக ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் தளர்வு அறிவிக்கப்படவில்லை. எனவே பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக நடத்தப்படுகிறது.
இதையடுத்து சிபிஎஸ்இ மாணவர்களுக்கு தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் எழுத்து பூர்வமாக மட்டுமே நடைபெறும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வுகள் ஆன்லைன் வாயிலாக நடைபெறும் என்று தகவல் வெளியாகிய நிலையில் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்பட மாட்டாது என்றும், பொதுத்தேர்வு தேதிகள் தொடர்பாக இதுவரை இறுதி முடிவு எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.