Categories
ஈரோடு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு பறந்த முக்கிய எச்சரிக்கை…… அலெர்ட்!…… மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு….!!!!

பள்ளிகளில் சளி, இருமல், காய்ச்சல் உள்ள குழந்தைகளை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை கொடுக்க வேண்டும் என்று ஈரோடு மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளிகள் தொடங்கி இயங்கி வருகின்றது. சமீப காலமாக கட்டுக்குள் இருந்த தொற்று பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரித்து வருகின்றது. பள்ளி கல்வித்துறை சார்பில் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவ, மாணவிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி காய்ச்சல், இருமல், சளி அறிகுறி இருப்பவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் தற்போது தொற்று தினமும் அதிகரித்து வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது . பள்ளிக்கு மாணவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளிலும் தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகின்றது.

காலை பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா ? என்பதை தெரிய உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் காய்ச்சல் போன்ற அறிகுறி உள்ள மாணவர்கள் பள்ளிக்கு அனுமதிக்கப்படாமல் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதே போல சளி இருமல் காய்ச்சல் அறிகுறி உள்ள மாணவ மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |