தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் குறைக்கப்பட்ட பாடங்கள் என்ன என்று அரசு விளக்கம் தர கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலின் காரணமாக கடந்த 10 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் பாடங்கள் சரியாக முடிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதன்காரணமாக 9-ம் வகுப்பு வரையில் உள்ள வகுப்புகளுக்கு 50 சதவீதம் பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்றும், 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மற்ற மாநில மாணவர்களுடன் போட்டிப்போட வேண்டும் என்ற அடிப்படையில் 35 சதவீதம் பாடங்கள் குறைக்கப்படும் என்றும் அறிவித்தது.
தற்போது வருகிற 19 ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், குறைக்கப்பட்ட பாடங்கள் எவை. என்னென்ன பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன என்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகவில்லை. இதனை உடனடியாக வெளியிடவேண்டும் என பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.