Categories
தேசிய செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம்…. டெல்லி முதல்வர் அறிவிப்பு…!!!

நேற்று நாட்டின் 65வது சுதந்திர தின விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு டெல்லி தலைமைச்செயலகத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அப்போது பேசிய அவர், கடந்த 74 ஆண்டுகால சுதந்திர வரலாற்றில் இயற்பியல் முதல் வேதியியல், கணிதம் முதல் அறிவியல் வரை பல்வேறு பாடங்களை மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறோம்.

ஆனால் தேசபக்தியை கற்று கொடுக்கவில்லை. எனவே வரும் செப்டம்பர் 27-ம் தேதி முதல் சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் பிறந்த நாளில் அரசு பள்ளிகளில் தேசபக்தி பாடத்திட்டம் அறிமுகம் செய்து வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்தியாவில் பல மாநிலங்களில் சைனிக் பள்ளிகள் உள்ளன. ஆனால் டெல்லியில் இல்லை. எனவே டெல்லியில் சைனிக் பள்ளியை திறப்பதற்கான ஏற்பாடுகளை மாநில அரசு செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |