பள்ளி மாணவர்களுக்கு திட்டமிட்டபடி பொது தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளதாவது: “மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைக்கப்பட்டு இருப்பதால் திட்டமிட்டபடி இந்த முறை பொதுத்தேர்வு நிச்சயம் நடைபெறும். வகுப்பறையில் குழந்தைகள் மீதான பாலியல் தொல்லை தொடர்பாக புகார் தெரிவிக்க இலவச அழைப்பு எண் 1098 14417 ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
வரும் கல்வியாண்டில் அனைத்து புத்தகங்களிலும், குழந்தைகளுக்கான உதவி எண்கள் இடம்பெறும். தற்போது உள்ள நோட்டுப் புத்தகங்களில் ரப்பர் ஸ்டாம்ப் மூலமாக இந்த இலவச அழைப்பு எண்கள் இடம்பெற செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.