தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கொரோனா தொற்று சற்று குறைந்து வந்ததை அடுத்து முதல்வர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இதையடுத்து 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை கூறியதாவது, நேரடி அல்லது ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடைபெறும். எந்த முறையில் வகுப்புகளை நடத்துவது என்பதை அந்தந்த பள்ளிகளே முடிவெடுக்கலாம். பிப்ரவரி 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.