தமிழகம் முழுவதும் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில்தான் கடந்த வாரம் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதனை அடுத்து மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் குறித்த அறிவிப்பை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
30 ஆம் தேதிக்குள் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு சான்றிதழை பெற்றுக் கொள்ள தேர்வுத் துறை அறிவித்திருந்தது. இந்நிலையில், 30-ஆம் தேதிக்குள் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயமில்லை. சூழல் சரியானவுடன் பள்ளிக்கு சென்று சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.