தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தொடக்கக்கல்வி மாணவர்களுக்கு மொபைல் போனில் தேர்வு நடத்துவதற்கு பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில்,அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மொபைல் போனில் என்னும் எழுத்தும் செயலி மூலமாக வருகின்ற 19ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை தொகுத்தறி மதிப்பீடு தேர்வு நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே பள்ளிக்கல்வித்துறையின் இந்த அறிவிப்பை பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 8 வயதுள்ள குழந்தைகளிடம் செல்போனை கொடுத்து அதில் தேர்வு எழுத சொல்வதா என அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.