மாசிமகம் திருவிழாவை முன்னிட்டு வருகின்ற 16-ஆம் தேதி ( பிப்ரவரி 16 ) புதன்கிழமை அன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு 16-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள 12-ஆம் வகுப்புக்கான திருப்புதல் தேர்வு 16-ஆம் தேதி திட்டமிட்டப்படி வழக்கம்போல் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.