Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்…. தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில்,பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. மாணவர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு வழக்கம்போல வகுப்புகளுக்கு சென்ற நிலையில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கொரோனா காரணமாக பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ள, மீதமுள்ள பாடங்களை நடத்தி முடிப்பதற்கு குறிப்பிட்ட கால அளவு மட்டுமே உள்ளது.

இதனிடையே கனமழை காரணமாக தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு வருவதால் பாடம் நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் மாணவர்களுக்கு கட்டாயம் பொது தேர்வு நடத்தப்படும் என்றும் பாடத்திட்டங்கள் ஒருபோதும் குறைக்கப்பட மாட்டாது என்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதியாக தெரிவித்துள்ளார். பள்ளிகள் முழுமையாக திறக்கப்பட்ட பிறகு கூடுதல் வகுப்புகள் வைத்து பாடங்கள் நடத்தி முடிக்கப்படும்.

இந்நிலையில் தமிழகத்தில் 48 மணி நேரத்திற்கு பிறகு  மழை படிப்படியாக குறைந்துவிடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. அதன்படி ஓரளவு மழையும் குறைந்துள்ளது. அதனால் தமிழகத்தில் இனி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு இல்லை. எனவே பாடத்திட்டங்கள் அனைத்தும் விரைவில் நடத்தி முடிக்கப்பட்ட பருவ தேர்வு மற்றும் பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |