தமிழகத்தில் கொரோனா காரணமாக செப்டம்பர் மாதம் திறக்கப்பட்ட பள்ளிகள் கடந்த மாதம் முதல் மீண்டும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதுமட்டுமல்லாமல் மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் நாளை முதல் தமிழகம் முழுவதும் அனைத்து வகுப்பு மாணவர்களும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
இதையடுத்து தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள் பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாகிறது. அதனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை கருத்தில் கொண்டு பிப்ரவரி 18 முதல் 22 ஆம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.