தமிழகத்தில் முக ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்ததை அடுத்து மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு நல்ல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் “உங்கள் நூலகம் உங்கள் கையில்” என்ற செல்போன் செயலியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்துள்ளார்.
போட்டித்தேர்வு, வேலை வாய்ப்புக்கு உதவும் வகையில் பல்வேறு தகவல்களை இதில் அறிந்துகொள்ள முடியும். இதேபோன்று “TN EMPLOYMENT NEWS” என்ற செல்போன் செயலி மற்றும் என்ற www.tnemployment.in என்ற இணையதளத்தையும் அவர் தொடங்கி வைத்துள்ளார்.