Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களே செம ஹேப்பி…. “5 நாட்கள் டூர்”…. தமிழக அரசு சூப்பர் திட்டம்….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப் படாமல் இருந்தது. இதனால் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து படிப்படியாக பாதிப்பு குறைந்து தற்போது 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாணவர்களுக்கு கோடை கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாம்கள் நடத்தப்பட இருக்கிறது.

அதன்படி பிளஸ் 1 முடித்த மாணவர்கள் கல்வி, இலக்கியம், அறிவியல், வினாடி வினா போட்டிகளில் சிறந்து விளங்கிய 1,250 பேரை தேர்வு செய்து நீலகிரிக்கு ஐந்து நாட்கள் அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முகாமில் உடற்பயிற்சி, செய்தித்தாள் வாசிப்பு, குறும்படம், உடல் மொழி, நடனம், இசை கவிதை எழுதுதல், இளம் அதிகாரிகள் சந்திப்பு உள்பட பல்வேறு செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

Categories

Tech |